Sale!
, , , ,

குணப்படுத்தும் கைகள் : வெ. இறையன்பு

Original price was: ₹30.00.Current price is: ₹29.00.

குணப்படுத்தும் கைகள் : வெ. இறையன்பு
No. of Pages : 40
Publisher : Vijaya Pathippagam
Gunappaduthum Kaigal : Iraianbu
2nd Edition : 2024

மருத்துவர் எவ்வளவு சிறந்த மருத்துவராகவும் இருக்கலாம். அவர் தரும் மருந்தும் அற்புதமானதாகத் திகழலாம். ஆனால் நோயாளி அவர் தருகிற மருந்தை, வேளாவேளைக்குத் தவறாமல் நோய் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையுடன் உண்ண வேண்டும். மருந்து பாதி என்றால், நலமாகி விடும் என்கிற நம்பிக்கை பாதி. அந்த நோயாளிக்கு மருந்தைத் தவறாமல் கொடுத்து, அன்பாகப் பேசி, ஆதரவாக நடந்துகொண்டு, நம்பிக்கை ஊட்டி குணப்படுத்துகிற பாலமாக இருப்பது செவிலியர்தாம்.

இந்தியா இன்று மருத்துவச் சுற்றுலாவில் மகத்தான இடத்தைப் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு முதலிடத்தைப் பெறுகிறது. கீழை நாடுகளிலிருந்தும், அரேபிய நாடுகளிலிருந்தும், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் மருத்துவத்துக்காக மக்கள் தமிழ்நாட்டுக்குப் படையெடுக்கிறார்கள் மருந்துக்கும் மனிதாபிமானம் இருப்பதால்.

மற்ற மாநிலங்களில் இருப்பவர்களும் கண் வலிக்கும், நெஞ்சு வலிக்கும் நம்மிடம் ஓடி வருகிறார்கள், காரணம் நாம் இதயங்களை இதயப்பூர்வமாகக் கவனித்துக்கொள்வதால்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “குணப்படுத்தும் கைகள் : வெ. இறையன்பு”

Your email address will not be published. Required fields are marked *