Unakkul Oru Thalaivan : Dr. S. Sylendra Babu IPS
காவல்துறை ஆணையாளராகப் பணியாற்றும் டாக்டர் சி.சைலேந்திரபாபு IPS அவர்கள் தனது பணிக்காக குடியரசுத்தலைவர், பாரதப் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் பதக்கங்களை பெற்றுள்ளார்கள்.நேர்மையான அரசு அதிகாரி என்று பெயரெடுத்த இவர் எளிமையின் இலக்கணமாக வாழ்பவர். அநீதிக்கு எதிரான பல நடவடிக்கைகள் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது பாராட்டுதல்களைப் பெற்றுள்ள இவர், இன்றைய இளைஞர்களுக்கு ரோல் மாடலாகத் திகழ்பவர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவர் ஆற்றும் எழுச்சியுரை மாணவர்களிடம் கற்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். ஆக விரும்பும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வெற்றி பெறச் செய்துவருகிறார்.நீங்களும் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாகலாம், உடலினை உறுதி செய், அமெரிக்காவில் 24 நாட்கள், உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.








Reviews
There are no reviews yet.