இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை / Inthiyaavin Thadupusi Valarshik Kadhai by Sajjan Singh Yadava
ஒவ்வொரு தனி மனிதரும் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புவர். தனி மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஒட்டு மொத்த நாடும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு கடுமையான நோய்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒரு நாடு வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி நோய்களை ஒழிக்க கடைசிக் குக்கிராமம் வரை மருத்துவ வசதிகள், கடும் நோய்களுக்கு எதிரான தொடர் கண்காணிப்புகள், மருந்துகள், தடுப்பூசிகள் என்று தீவிர நடவடிக்கைகளை ஒரு நாடு மேற்கொண்டால்தான் வெற்றி பெற முடியும். அவ்வாறு பெரியம்மை உள்ளிட்ட நோய்கள் இந்தியாவில் தடுப்பூசி மூலம் ஒழிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் வளர்ச்சியில் இந்தியா உலக அரங்கில் எவ்வாறு உயர்ந்து நிற்கிறது என்பதை சுவைபடச் சொல்கிறது இந்த புத்தகம். வழக்கமாக மருத்துவம், நோய்கள் சம்பந்தப்பட்ட புத்தகம் என்றாலே தொடர்ந்து படிக்கும்போது ஒரு சோர்வு தட்டும். அதுபோன்ற சோர்வு எதுவும் இல்லாமல் தடுப்பூசி வளர்ச்சியில் இந்தியா எப்படி படிப்படியாக வளர்ச்சி அடைந்து உலகத்துக்கே வழிகாட்டியாக விளங்குகிறது என்பதை நம் கையைப் பிடித்தபடி அழைத்துச் சென்று உலாவிக்கொண்டே சுவாரசியமாக கதையைச் சொல்வது போல விறுவிறுப்பாக விவரிக்கிறார் ஆசிரியர்.
Reviews
There are no reviews yet.