Thiraipada Solai – Sivakumar / திரைப்படச் சோலை
பன்முகக் கலைஞர் சிவகுமார், தனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களை ‘இது ராஜபாட்டை அல்ல’ என்கிற சுயசரிதை நூலாகப் படைத்தார். தமிழின் தலை சிறந்த வழிகாட்டி நூல்களில் ஒன்றாக, தமிழ் சினிமாவின் முக்கிய வரலாற்று நூல்களில் ஒன்றாக விளங்கிவரும் அந்நூலுக்குப் பின்னர், இனி எழுதுவதற்கு அவரிடம் எதுவும் மிச்சமில்லை என்றுதான் வாசகர் உலகமும் திரையுலகமும் எண்ணிக்கொண்டிருந்தன. ஆனால், அது உண்மையல்ல என்பதை எழுத்து, மேடைப்பேச்சு ஆகிய தளங்களில் அவரது தொடர்ச்சியான செயல்பாடுகள் நிரூபித்து வருகின்றன. திரையுலகம் குறித்து அள்ள அள்ளக் குறையாத தன் வாழ்வனுபவத்தின் நினைவுகளை மீட்டியும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அன்றாடம் எழுதி வந்துள்ள தனது டைரிக் குறிப்புகளிலிருந்தும் சிவகுமார் பேசவோ எழுதவோ தொடங்கினால், அதிலிருந்து வாழ்ந்து மறைந்தவர்கள் உயிரோடு எழுந்து வருவதைக் காண முடியும்.
Reviews
There are no reviews yet.